März 28, 2025

இலங்கையில் டிஜிற்றல் முத்திரை!

இலங்கை தபால் திணைக்களம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல்முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டள்ளது.

இதற்கமைவாக 25 ரூபா பெறுமதியுடைய முத்திரையொன்று குறியீட்டுடன் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. இந்த முத்திரை தொடர்பாக அல்லது இது தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்கு அதன் குறியீட்டை ஸ்கேன் செய்து முத்திரை திணைக்களத்தின் இலங்கை தபால் இணையதளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் ரூ. 500 பெறுமதியுள்ள பாதுகாப்பு அடையாளத்துடன் புதிய தபால் முத்திரையொன்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் வெளியிடப்பட்டது.

இந்த முத்திரையில் ஒரு பாதுகாப்பு குறியீடு மறைந்திருப்பதாகவும், எவரேனும் ஒருவர் அதனை முறைகேடாக பயன்படுத்துபவார்களாயின் அது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.