März 28, 2025

நீதிக்கான எனது அறைக்கூவல்

இழந்தோம் எம்சொந்த மண்ணில் உறவுகளை
இன்னும் இழக்க போகிறோமா! பிரிவினையால்
உடலை வருத்தி உணவின்றி! உணர்வின்றியே
அமைதிவழியில் எமதுஉரிமை! போராட்டங்கள்
எம்கேள்விக்குவிடை!தெரியவும் புரியவுமில்லை!
வீழ்ந்துவிட்டோம்!என்று!எமைஎண்ணக்கூடாது
எங்கும் சோர்ந்தும் விடவில்லை!இது உண்மை!
மீண்டும் எழுர்ச்சி கொண்டு! எங்கும் கூடுவோம்!
கடமையோடு! பொறுமையாக! எழுந்திடுவோம்!
நாங்கள் விழித்தெழுந்து விட்டோம் தடையின்றி
உறங்கிய உலக கதவுகளை!தட்டிட வருகிறோம்
விடைதருக!நாங்கள் வருகிறோம் வழிதாருங்கள்
தருகிறோம் பலகேள்விகளை! நாம் நாளைவரை
நாம்நொந்து விடாது இருக்க! நீதி கேட்கிறோம்
வீழ்ந்தாலும் நாம்!எழுந்து!எழுந்து! வருகிறோமே
ஆலமரகிளை!விழுதுகள்போல் படரும்தொடரும்
கணேஸ்