März 28, 2025

அவசர அவசர சந்திப்பு! ஆதரவு வழங்குமாறு கோரிக்கை!

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.இது தொடர்பாக பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரேசில், ஜப்பான், தென்கொரியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து மனித உரிமைப் பேரவையின்  இலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போது முழுமையான ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார்.