Oktober 23, 2024

கிழக்கு முனையம் முடிந்து இனி மேற்குமுனையம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்கான முதலீட்டாளர்களை அறியத்தருமாறு இந்தியா மற்றும் ஜப்பானுக்கு அறிவிப்பது தொடர்பில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, நேற்று (15) முதல் தடவையாக கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதனை, குழுவின் தலைவரும் துறைமுகங்கள் அமைச்சின் செயலாளருமான யூ.டி.சி. ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஜப்பான் தூதரகம் ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் குழு கூடவுள்ளதுடன், 7 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவின் அறிக்கையை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளதார்.