März 31, 2025

ஓடிப்போகவில்லையென்கிறார் விமலின் மனைவி!

முன்னணி வர்த்தகர் ஒருவருடன் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளிவந்த செய்தியினை அமைச்சர் விமல் விமல் வீரவன்சவின் மனைவி சசி மறுதலித்துள்ளார்.அத்துடன் குறித்த செய்தி தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் தான் மற்றும் தனது பிள்ளைகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக விமல் வீரவன்சவின் மகனின் நண்பனொருவன் அவர்கள் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதும் அக்கொலை பின்னணியில் விமலின் மனைவி உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.