Oktober 23, 2024

யாழ்ப்பாணம் அருகே 3 தீவுகளில் சீனாவின் எரிசக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி…ஆபத்தில் தமிழகம்

தமிழகத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள தீவுகளில் சீனாவின் மின்சக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு யாழ்ப்பாணம் அருகே காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை ரூ.87 கோடி செலவில் செயல்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தம் சீனாவைச் சேர்ந்த சினோசர் – இடெக்வின் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 50கிமீ தொலைவில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நைனா தீவு ஆகிய தீவுகளிலேயே சீன நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
தமிழகம் மற்றும் இந்திய எல்லைக்கு மிக அருகாமையில் சீனா சார்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதே போல கடந்த 2018ம் ஆண்டில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் சீனா நுழைய முயன்றதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் எரிசக்தி திட்டம் மூலம் இந்திய எல்லையை சீனா நெருங்குவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.