März 28, 2025

கனடாவில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய குழு!

கனடாவில் பிரவுட் பாய்ஸ் என்ற குழு கனடா மக்களின் அமைதியை கிளறி வருவதால் கனடா அரசு அந்தக் குழுவினை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது.ஏற்கனவே இது போன்ற 13 குழுக்களை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கனடா நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் இந்த பயங்கரவாத பட்டியலைப் பற்றியும் பயங்கரவாத குழுக்களை பற்றியும் விரிவான விளக்க உரையை அறிவித்துள்ளார்.

அதாவது பிரவுட் பாய்ஸ் போன்ற பயங்கரவாத குழுக்களில் உள்ள பயங்கரவாதிகளின் சொத்துகள் கனடா அரசால் உடனடியாக முடக்கப்படும்.

மேலும் பிரவுட் பாய்ஸ் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் முத்திரை குத்திய முதல் நாடு கனடா நாடு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.