März 28, 2025

எந்த அமைப்பிலும் நானில்லை:நிலாந்தன்?

அனைத்துலக தமிழர் செயலகம் என்ற அமைப்பினால் நேற்றைய தினமான 19ம் திகதி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டமைப்பொன்றில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் கிடையாதென மறுதலித்துள்ளார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

இது தொடர்பில் அவர் பகிர்ந்துள்ள செய்தி குறிப்பில் அந்த அமைப்பு யாருடையது, யார் இயக்குகிறார்கள்? எங்கிருந்து இயங்குகிறது ?என்ற எந்த ஒரு விபரமும் எனக்கு தெரியாது.

இதுபோன்ற அமைப்புகள் எதனோடும் எனக்கு உறவுகள் கிடையாது. இதுபோன்ற அமைப்புகள் எதனோடும் இணைந்து செயற்பட நான் தயாராகவும் இல்லை. உள்நோக்கமுடைய யாரோ எனது பெயரை அதில் இணைத்திருக்கிறார்கள். எனவே அந்த அறிக்கைக்கும் எனக்கும் அந்த அமைப்புக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத்தருகிறேன் என நிலாந்தன் தெரிவித்துள்ளார்.