März 28, 2025

நந்தியும் போச்சு?

 

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்கள் அண்மையில் தமக்காக தயாரித்துக்கொண்ட ரி-சேர்ட் இல் பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னத்தை மாற்றியமைத்துள்ளனர்.நந்தி வரவேண்டிய இடத்தில்அது அகற்றப்பட்டு UJ என்ற எழுத்துக்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விசாரித்தபோது, ஏற்கனவே சிங்கள மாணவர்களால் இச்சின்னம் மாற்றப்பட்டது எனவும் அதையே மருத்துவபீட மாணவர்கள் பெற்றுக்கொண்டனர் எனவும் தெரியவந்துள்ளது.

சிங்கள மாணவர்கள் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய அதிக ரி-சேர்களை பல்கலைக்கழகத்தின் பெயரில் தயாரித்து மாணவர்கள் அல்லாத வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளமையும் தெரியவருகின்றது.