März 28, 2025

கடத்தப்பட்ட பிக்கு சடலமாக?

கடத்தப்பட்ட பிக்கு ஒருவர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொட்டெனியாவாவில் உள்ள கல்லறையில்; எரிந்து கிடந்த சடலம் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்ட பிக்குவின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலத்தை அவருடன் கூட வசிக்கும் மற்றொரு பிக்கு அடையாளம காட்டியுள்ளார்.

ரெவ் உடுவில தம்மசிறி (65) தேரோவை சனிக்கிழமை ஹன்வெல்லாவில் உள்ள வனப்பகுதியிலிருந்து பத்து உறுப்பினர்களை கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றது.

கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக ஒரு விகாரைக்கு வந்துள்ள புதிய துறவியின் பெற்றோர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.