März 28, 2025

தம்மிக்கபண்டாரவிடம் பாணம் வாங்க சென்ற மேலும் 5 பேருக்கு கொரோனா

கேகாலையில் மருத்துவர் தம்மிக்க பண்டாரவினால்
அறிமுகம் செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு பாணத்தைப் வாங்கச் சென்றவர்களுக்கு மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
5 வயது குழந்தையும், அந்தக் குழந்தையின் தாய் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் வறக்காப்பொல மற்றும் கேகாலையைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்புப் பானத்தைப் பெறுவதற்காக வரிசையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அளவில் நின்றவர்களின் நிலைமை குறித்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப்பணிப்பாளர் Dr.ஹரித்த அலுத்கே கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர்களில் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.