März 28, 2025

இன்று இலங்கைக்கு வந்த முதலாவது தொகுதி சுற்றுலா பயணிகள்!!

இன்று இலங்கைக்கு வந்த முதலாவது தொகுதி சுற்றுலா பயணிகள்!!

கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் இலங்கைக்கு முதலாவது தொகுதி சுற்றுலா பயணிகள் இன்று (28) வந்துள்ளனர்.

11 பணியாளர்கள் உட்பட 185 பேரை ஏற்றிக்கொண்டு உக்ரைனின் ஸ்கைஅப் ஏர்லைன்ஸ் விமானம் PQ-555, மதியம் 2 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இன்று மாலை விமானம் புறப்பட்டு செல்கிறது.

கடந்த மார்ச்சில் விமான நிலையங்கள் மூடப்பட்ட பின்னர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு வளைய திட்டத்துடன் நாட்டுக்கு அனுமதிக்கும் திட்டத்தின் முன்னோடியாக இன்றைய சுற்றுலா பயணிகளின் வருகை அமைந்துள்ளது.

இதை தொடர்ந்து மேலும் பல நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் குழுக்கள் அடுத்துவரும் நாட்களில் மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வரவள்ளனர்.