März 28, 2025

அரசாங்கம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகின்றது – சஜித்!

சமூக ஊடகங்களின் பயன்பாட்டை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கான அரசாங்கத்தின் செயற்பாடு ஜனநாயக விரோத செயல் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற முடிவுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நிற்கும் என்றும் சமூக ஊடதிற்கான சுதந்திரம் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

பல சந்தர்ப்பங்களில் தான் சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.