März 28, 2025

தமிழகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் – முதலமைச்சர்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த உடன் தமிழகத்தில் இலவசமாக விநியோகம் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் எதிர்கட்சியினரின் சூழ்ச்சி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை என கூறிய முதலவர் தான் விவசாயி என்று மு.க.ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

வேளாண் சட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களை சொல்லுமாறு கேட்டால் எதிர்கட்சிகளிடம் பதில் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் கூட்டணியில் தொடர்கின்றன என்றும் குறிப்பிட்டார்.