März 28, 2025

நட்ப்பைக் காப்பாற்ற ரஜினிக்கு அழைப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் வரும் சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்கவுள்ளார். தான் முதல்வராக மாட்டேன் எனவும் நல்லவர் ஒருவரை முதல்வராக்குவேன் எனவும் ரஜினி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் ரஜினியுடன் இணைந்து பயணிக்கத் தயார் என கமல்ஹாசன் தொடர்ந்து கூறி வருகிறார். மக்களவைத் தேர்தலின்போது கூட ரஜினியிடம் ஊடகங்கள் வாயிலாக கமல் ஆதரவு கோரினார் என்றாலும் ரஜினி யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என சமீபத்தில் கமல் தெரிவித்தார்.