März 28, 2025

போலி விளம்பரம் ஐபோன் நிறுவனத்துக்கு; 217கோடி ரூபாய் இத்தாலி அபராதம்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வகை கைபேசிகள் 30 நிமிடம் வரை தண்ணீரில் இருந்தாலும் எந்த சேதமும் ஆகாது என விளம்பரங்களை வெளியிட்டனர். ஆனால் 4 மீட்டர் ஆழத்தில் தூய தண்ணீரில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என ஆய்வக முடிவுகள் தெரிவித்தன. இதனால் இத்தாலியைச் சேர்ந்த ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம், தவறான வாக்குறுதிகளை அளித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக 217கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஆனால் இந்த தொகை மிகவும் குறைவு என கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே அமெரிக்காவில் மின்கலம் தொடர்பாக ஐபோன் நிறுவனம் போலியான் வாக்குறிதி அளித்ததால் 2075,36 கோடி அபராதம் கட்டி சமரசம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.