März 28, 2025

அருகதையற்று போனோம்:சிந்திக்கின்றது சிங்களம்?

தமிழ் மக்கள் மீது ஆட்சியாளர்கள் துப்பாக்கிகளை நீட்டியபோது நாம் பேசாமல் இருந்தோம்.இப்போது எம் பக்கம் திரும்புகையில் கேட்பதற்கு யாருமில்லையென முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை பொது போக்குவரத்து சேவைகள் பொது மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. சிறையில் கொவிட் என்ற அச்சத்திற்கு பதிலளிக்கும் விதமாக பி.சி.ஆர் சோதனைகளை கேட்கும் கைதிகள் தோட்டாக்களை பரிசாகப் பெறுகின்றனர்.

அவர்கள் குடிபோதையில் இருப்பது போல் பிரச்சாரப்படுத்தப்படுகின்றனர்.கொவிட் பரிசோதனை  கோரிக்கை இப்போது அதிகமான சிறைகளில் உள்ளது.ஆனால் போதைப்பொருட்களை காரணங்காட்டி கொல்லும்படி அரசாங்கம் உத்தரவிடுகின்றது..

இவை அனைத்திலும், மக்களை பாதுகாக்க தவறிய அரசாங்க அமைச்சர்களும் ஆன்லைனில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துகிறார்கள்.

ஆட்சியாளர் ஒரு நல்லொழுக்கமுள்ளவர் என்றும் குடிமகன் ஒரு பாவி என்றும் இப்போது காட்டப்படுகிறது.