März 28, 2025

தடுப்பு மருந்து அதிக பலன் அளிப்பதாக அமெரிக்க சுகாதார துறை தகவல் வெளியிட்டது.

உலக அளவில் அமெரிக்காவின் மாடர்னா, பைசர், ஜெர்மனியின் பயான்டெக் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் முன்னணி வகிக்கின்றன. இவை அனைத்தும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் மாடர்னா தடுப்பு மருந்தை அவசர சிகிச்சைக்கு உதவும் தடுப்பு மருந்தாக அறிவித்து அதன் விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த தடுப்பு மருந்து நிர்வாகம் கூறியது. இரண்டு டோஸ்கள் கொண்ட மடர்னா தடுப்பு மருந்து அதிக பலன் அளிப்பதாக முன்னதாக அமெரிக்க சுகாதார துறை தகவல் வெளியிட்டது.