Mai 13, 2025

தண்ணீர் குடித்தனர்:நீதிவான் பணிப்பில் கைது?

கடமையிலிருந்த போது, தண்ணீர் பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விருவரும் பாணந்​துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில் கடமையிலிருந்துள்ளனர்.

அவ்விருவருக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும்,ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் பாணந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் இருவரும் ஒரு போத்தல் தண்ணீரை பகிர்ந்து அருந்தியமையாலேயே இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இவர்களின் செயற்பாடு குறித்து கண்காணித்த பின்னரே, நீதவான் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.