März 28, 2025

ஆமிக்கு ஒரு செல்பி பார்சல்?

முல்லைதீவினில் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதில் மும்முரம் காட்டிவரும் இலங்கை வனவள திணைக்களத்தை முடக்கி ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அதிகாரிகள் அறைகளினுள் பதுங்கி கொண்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது.குரல் எழுப்பி அவர்களை அழைத்து கடிதங்களை கையளித்த ஊடகவியலாளர்கள் அவர்கள் அலுவலகம் முன்பாகவே மரக்கன்று நாட்டினர்.

இந்நிலையில் சிங்கள வனவள திணைக்கள அதிகாரிகளது பணிப்பினையடுத்து விரைந்து வந்த படை அதிகாரிகள் ஊடகவியலாளர்களை புகை;கபடம் எடுக்க முற்பட்ட குழப்பம் ஏற்பட்டிருந்தது.

எனினும் ஊடகவியலாளர்கள் தாமாக முன்வந்து புகைப்படமெடுத்து வழங்கி படை அதிகாரிகளை திண்டாட வைத்தனர்.

ஏங்கள் புகைப்படங்களா தேவை என தெரிவித்து இப்புகைப்படங்களை வழங்கிர்.