Mai 12, 2025

யாழ்.நகருக்கும் வந்தது கொரோனா?

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் தொல்பொருட்திணைக்களத்தின் அரும்பொருட் காட்சியகத்தில் பணிபுரிகின்ற கம்பஹா மாவட்த்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் தாய் கொரானா தொற்றுடன் தொடர்புடைய ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிகின்றார். இதன் பிரகாரம் குறித்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந் நிலையில் நாவலர் வீதியில் அமைந்திருக்கு தொல்பொருட்திணைக்களத்தில் பணிபுரிகின்ற பெண் தனது நண்பருடன் நேற்று முன்தினம்தான் யாழ்ப்பாணம் வந்த நிலையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தற்பொழுது அந்த பெண் அவர் தங்கியுள்ள இடத்திலும் அவருடைய நண்பர் பணிபுரிகின்ற கோட்டைப் பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை யாழ்.மாநகர சபையின் சுகாதார பிரிவினர் விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.