Mai 12, 2025

கடலமை பிடிக்கின்றது அதிரடிப்படை?

யாழில் கஞ்சா பிடிப்பதில் மும்முரமாக இருந்த இலங்கை அதிரடிப்படை கடலாமை இறைச்சியுடன் நால்வரை இ;ன்று  விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நால்வர் யாழ்ப்பாணம் குருநகர் அண்ணாசிலை பகுதியில் வீடு ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் கடல் ஆமையினை உணவுக்காக பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.