März 28, 2025

மஹிந்தவிடம் பதவி வேண்டாம் என கூறிய பந்துல

இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவை பேச்சாளராக இருந்த அமைச்சர் பந்துல குணவர்தன அப்பதவியை தற்போது நிராகரித்துள்ளார்.

இதுபற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கூறியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனக்கு வழங்கப்பட்ட பணிகளை தவிர மேலதிக பொறுப்புக்கள் வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.