März 28, 2025

மஹிந்த தேசப்பிரிய பதவி விலக காரணம் என்ன ?

மஹிந்த தேசப்பிரிய பதவி விலக காரணம் என்ன ?

ஸ்ரீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று தமது பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே பதவியில் இருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம திகதியே முடிவடைகிறது. எனினும் தனிப்பட்ட காரணங்களினால் முன்கூட்டியே விலக தீர்மானித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தாம் இலங்கையின் தேர்தல் பணிகளில் கடந்த 37வருடங்களாக பணியாற்றியுள்ளதாக தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.