März 28, 2025

இலங்கையர்கள் மீது தாக்குதல்:ஜேவிபி கண்டனம்?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்களை மீட்க இலங்கை அரசு தவறிவிட்டதாக ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே  ஜோர்தானில் தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்கள் மீது,  அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், முறையாக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது,  அந்நாட்டு பொலிஸாரால் கடந்த 27ம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது