März 28, 2025

கனடாவில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது!

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் பம்பலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) மதியம் 1.30 மணியளவில் குறித்த நபர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.