März 31, 2025

வாக்குச்சீட்டு தயார்?

பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, 116,900,000 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில், வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பினை அடுத்து, இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என அச்சகக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டதாக தெரியவருகிறது.