Mai 4, 2024

கொரோனாவைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் பல மில்லியன் ஃப்ராங்குகள் மோசடி..!! பலர் கைது

கொரோனாவைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் ஒரு மோசடி நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவை பயன்படுத்தி ஏமாற்றி கடன் பெற்றது தொடர்பாக பொலிசார் பல நிறுவனங்களில் ரெய்டுகளில் ஈடுபட்டார்கள்.

வங்கிகளிலிருந்து பல மில்லியன் ஃப்ராங்குகளை ஏமாற்றி பெற்றதற்காக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிக ஃப்ராங்குகள் நாட்டுக்கு வெளியே பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

உண்மையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அவசர உதவியாக அரசு நிதி உதவி செய்து வருகிறது.

இதை பயன்படுத்தி இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.

பண மோசடி, தவறான நிர்வாகம் மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளன.