März 31, 2025

அம்பாறையில் ஆமி மரணம்:சந்தேகமாம்?

அம்பாறை மாவட்டம், காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய 42 வயதான இராணுவ வீரர் ஒருவர் நேற்று (21) இரவு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

சுவாசப் பிரச்சினை காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும் இறந்தவரின் தொண்டையில் இருந்து பெறப்பட்ட மாதிரியை சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.