März 31, 2025

ZOOM செயலி மூலம் தமிழர் ஒருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு!

போதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம்,  Zoom விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது.
சிங்கப்பூர் நாட்டில்  போதை பொருட்கள் கடத்துவது, உட்கொள்வது கடும் குற்றமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் போதைபொருள் கடத்தல் வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம்,   குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கியது.  இதுவே காணொளி காட்சி மூலம் வழங்கப்பட்ட முதல் தூக்குத் தண்டனை தீர்ப்பு இது  என கூறப்படுகிறது.
சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நீதிமன்ற பணிகள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 2011ம் ஆண்டு நடந்த ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசியாவை சேர்ந்தவர் புனிதன் கணேசன் (வயது 37) என்பவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. Zoom செயலி  வாயிலாக காணொளி காட்சி மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றவாளி மீதான புகார் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு தூண்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.