Oktober 22, 2024

செவ்வாயில் நீர் நிலைகள்: நாசாவின் புதிய கண்டுபிடிப்பு!!

சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் திரவ நீர்த் தேக்கம் உள்ளது என்பதை நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

செவ்வாய்கிரகத்தில் மேற்பரப்புக்கு அடியில் ஆழமாக மறைந்து இருக்கும் திரவ நிலையிலான ஒரு பெரிய நீர்தேக்கம் உலகளாவிய கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட  11.5கி.மீ முதல் 20 கி.மீ வரை அமைந்துள்ள இந்த நீர் உடைந்த பாறைகளுக்குள் இடையில் தேங்கி நிற்கிறது.

இதில் நீர் உறைந்து இருக்கும் மேற்பரப்பை போல் இல்லாமல் திரவ நீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert