Oktober 23, 2024

என்ன பிடிக்கிறாய்:சுவஸ்திகாவிற்கு குடை!!

மீண்டும் கருத்து சுதந்திரம் பற்றி பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் பேச முற்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர்கள் செய்த சாதனைகளை கேள்விக்குள்ளாகியுள்ளன பொது தரப்புக்கள்

„தமிழ் மாணவர்களின் நிலைப்பாடுகளை எந்த பல்கலை கழகத்திலும் பேச கூடிய கருத்து சுதந்திரம் எங்களுக்கு இன்னமும் இல்லை என்பதை வெளிக்கொணர்ந்து இருக்க வேண்டும்

குறைந்தபட்சம் மேற்படி நபரின் கருத்து தொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமல் அந்த நபரின் கருத்து சுதந்திரம் குறித்து மாத்திரம் கவலைப்படுவது நியாயமற்றது . அரசியல் உள்நோக்கம் கொண்டது.

மேற்படி நபரின் கருத்துருமைக்காக பேசும் இந்த சங்கம் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் இராணுவ புலனாய்வாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது அவரின் கருத்துரிமைக்காக பேசவில்லை

கலாநிதி குருபரன் பதவி விலக நேர்ந்த போதும் கூட அமைதியாக வெறும் முனகல்களோடு கடந்து போனது

அதே போல ஆயுததாரி ஒட்டுக்குழு உறுப்பினர்கள் பேரவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட போதும் மிக மிக அமைதியாகவே இருந்தார்கள்

யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் நியமனங்களில் நிலவும் இராணுவ தலையீடுகள் குறித்து இன்று வரை வாயே திறப்பதில்லை

சிங்களமயமாக்கல் , காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் , காணாமல் போனோர் நெருக்கடி , பொருளாதார சீரழிவுகள் என ஆசிரியர் சங்கம் அறிவுபூர்வமாக பங்களிக்க வேண்டிய எந்த இடங்களிலும் மௌனிகளாகவே இருக்கின்றார்கள்

இந்த இடத்தில அரசியல் வெளிகளுக்கு அப்பால் சட்டத்துறை தனது வளவாளர்களை தெரிவு செய்யும் பொது காத்திரமான ஆய்வுககள் , நீண்ட அனுபவம் மற்றும் கலாநிதி பட்டப்படிப்பு என பங்களித்த பெறுமதியான நபர்களை தெரிவு செய்யவாது ஆசிரியர் சங்கம் போன்ற அமைப்பு பங்களிக்க வேண்டும்

யாழ்ப்பாண பல்கலை கழக சட்டத்துறை தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது ஆனால் இன்று வரை எந்த காத்திரமான ஆய்வுகளை செய்ததாக எந்த தகவல்களும் இல்லை. குறைந்த பட்சம் ஒரு கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த விரிவுரையாளர் ஒருவர் கூட இருப்பதாக அதன் இணையதளத்தில் தகவல் இல்லை „

இந்நிலையில் ஆசிரிய சங்கத்தை கேள்விக்குள்ளாகியுள்ளனர.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert