September 19, 2024

மற்றொரு கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் டிரம்ப்!


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவரது பிரச்சாரக் குழு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி டிரம்பை படுகொலை செய்ய முயற்சிப்பது போல் தெரிகிறது அந்த அமைப்பு கூறியுள்ளது.

வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ஃப் மைதானத்தின் ஒரு பகுதியில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபரை அமெரிக்க இரகசிய சேவை முகவர்கள் அடையாளம் கண்டு சுட்டதையடுத்து ஆயுததாரி தனது துப்பாக்கி,  மேமரா , இரண்டு பைகள் உட்பட பிற பொருட்களை கீழே போட்டுவிட்டு கருப்பு நிற நிசான் காரில் தப்பிச் சென்றார்.

பாம் பீச்சில் உள்ள காவல்துறையினர் சோதனையிட்டபோது ஒரு தொலைநோக்கி பார்வையுடன் கூடிய AK-47 தாக்குதல் துப்பாக்கி மற்றும் ஒரு GoPro கேமராவை சம்பவ இடத்தில் புதர்களில் கண்டுபிடித்தனர் என்று கூறினர்.

பாம் பீச் கவுண்டி ஷெரிப் ரிக் பிராட்ஷா ஒரு ஆண் சந்தேக நபர் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் பெயர் Ryan Wesley Routh என  மூன்று சட்ட அமலாக்க அதிகாரிகள் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert