September 19, 2024

மோடி வருகிறார்:10 ஒப்பந்தங்கள் தயார்!

பூநகரி கௌதாரிமுனையில் அதானி குழுமத்தினால் முன்னெடுக்கப்படும் காற்றாலைகளது நிர்மாணப்பணிகள் உள்ளிட்ட பலவேலைத்திட்டங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்

 இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகின்ற போது ஆரம்பமாகவுள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மோடி இலங்கைக்கு வர உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்பட்டுவருகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை தொடர வைப்பதில் இந்தியாவின் தலையீடுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்கவை இணைக்கும் முயற்சியில் இந்தியா தலையீடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

மோடியின் பயணத்தின் போது 10 உடன்படிக்கைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட உள்ளதாக கூறப்படுகின்றது.

எட்கா, ராமல் பாலத்தை அமைத்தல், மின் இணைப்பு, எரிபொருள் பாரிமாற்றம், விமான நிலையங்களை குத்தகைக்கு வழங்கல் என 10 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட உள்ளதாக முன்னாள் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert