September 19, 2024

சி.வி.விக்கினேஸ்வரனே பொதுவேட்பாளர்:சுமா கண்டுபிடிப்பு!

பொது வேட்பாளரை காரணங்காட்டி தெற்கு அரசியல் தரப்புக்களிடமிருந்த பேரம் பேசி பணப்பெட்டிகளை தமிழ் தலைவர்கள் கைமாற்றிக்கொண்டிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது வீண் செயல் என் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளரை கொண்டு வருவதற்கு தயாராக இருக்கின்றது.அதற்காக தமது தரப்பிலிருந்து ஆதரவும் கிடைக்காது.இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் தீர்மானமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன ஆட்சிக்கு வரும் நோக்கில் பொது வேட்பாளரை முன்வைக்க முயல்வதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெர்துவேட்பாளரை தோற்கடிக்க ஏதுவாக செயற்படுவதாக தெரிவித்தே தெற்கு அரசியல் தரப்புக்களிடம் பேரம் பேசி பணப்பெட்டிகளை கைமாற்றிக்கொண்டிருப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert