Juni 28, 2024

“தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்அமைப்பு விடும் வேண்டுகோள்”(WTSL).

“தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்தலைவர்களுக்கும் இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்அமைப்பு விடும் வேண்டுகோள்”(WTSL).
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சித்தார்த்தன்அவர்கள் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில்ஆற்றிய உரை மிகவும் காத்திரமானதும் இன்றைய சூழ்நிலையில்அவசியமானதுமாகும். அதன் பின்னர் இந்திய வெளிவிகாரஅமைச்சர் திரு  ஜெயசங்கர் உடனான சந்திப்பில், திருசுமந்திரன் அவர்கள் ஐனாதிபதி வேட்பாளர்களான சஜித்பிரேமதாச மற்றும் அனுர திசாநாயக்க ஆகிய இருவரும் காணி, பொலிஸ்  அதிகாரங்களுடன் 13 வது திருத்தச் சட்டத்தைமுழுமையாக நிறைவேற்றவிருப்பதாகக் கூறியிருப்பதாகஅழுத்தமாகச் சொல்லியிருந்தார். இது 13 வது திருத்தச்சட்டத்தை உடனடியாக அதிகபட்ச அதிகாரங்களோடுசெயற்படுத்த ஐனாதிபதிக்கு ஒன்றுபட்டு அழுத்தம் கொடுக்கதமிழ்ப் பிரதிநிதிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத்தந்திருப்பதாக நாம் கருதுகிறோம்.  
குறிப்பாக மட்டக்களப்பில் இரண்டு நாட்களுக்கு முன்னர்இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று ஜனாதிபதிகூறியுள்ள நிலையில், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ்தலைவர்களும் திரு சித்தார்த்தன் , திரு சுமந்திரன் ஆகியோரின்முனைப்புக்கு ஆதரவாக தங்களது உடன்பாட்டினைதெரியப்படுத்துமாறு WTSL  கேட்டுக் கொள்கிறது.
இலங்கை மக்களின் எதிர்காலம் மேலும் இருளில்மூழ்காதபடிக்கு ஆவன செய்யும் வகையில் அதிஉயர்அதிகாரங்களோடு மாகாணசபைகளை உடனடியாக இயங்கச்செய்தும், தாய்நாட்டிற்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பைஊக்குவிக்கும் வகையிலான பொறிமுறைகளைஅமுல்படுத்தியும், நாட்டை அதன் பாரிய பொருளாதாரநெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
இத்தருணத்தில் தமிழ் மக்களின் தலைவர்கள் மேற்கொள்ளும்சாதுரியமான விண்ணப்பங்கள், கோரிக்கைகள், அழுத்தங்கள்மட்டுமே அனைவரின் ஆதரவுகளோடும் இந்தியாவின்ஒத்துழைப்போடும் முடிந்த அளவு அதிகாரங்களுடன் இயங்கக்கூடிய சட்டபொறிமுறைகளை உள்ளடக்கிய மாகாணசபைநிர்வாக அலகுகளை நாடு முழுவதும் அமுல்படுத்த வழிசெய்யும். இதன் மூலம் நாட்டு மக்கள் தமது பிரதேசங்களில் உரியஅபிவிருத்திகளை மேற்கொள்ளவும் புலம்பெயர் மக்களினதும்உலக நாடுகளினதும் முதலீடுகளை துரிதமாகவும் நாட்டின்தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் பெற்றுப் பயனடைய முடியும்.
பகிரப்படும் அதிகாரங்கள் சிறுபான்மை மக்களின்அபிலாசைகளை தற்போதைக்கேனும் ஓரளவு பூர்த்தி செய்யும்என்பதையும், இதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் எவ்விதபாதகங்களுக்கும் உள்ளாக மாட்டார்கள் என்பதையும், அதுஇலங்கை மக்கள் அனைவருக்கும் நன்மையே பயக்கும்என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எமது பலவீனங்களாலும்பாரபட்சங்களாலும் அதைப் பயன்படுத்திக் கொள்வதில் தோல்விஏற்படும் வகையிலான செயற்பாடுகளைத் தவிர்த்து, அதனைமேலும் பலம்வாய்ந்ததாக மாற்றிக்கொள்ள நம்பிக்கை அளிக்கும்வகையில் செயற்பட்டு, பெரும்பான்மை மக்களினதும் உலகநாடுகளினதும் ஆதரவினை வளர்த்துக் கொள்வதுஅவசியமாகும்.
துணிச்சலான சரியான முடிவுகளை எடுத்து, அதிகார பரவலாக்கநிர்வாக கட்டமைப்புகளை செயல்படுத்தி, மக்கள் மத்தியிலானதமது செல்வாக்கினை உயர்த்திக் கொள்ளலாம் என்பதைஇன்றைய ஐனாதிபதி நன்கு உணர்ந்தவராகவே இருப்பார்.
இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடாது, மாகாணசபைகளைஉடனடியாக இயங்க வைக்கும் வகையில் துரிதகதியில் ஆவனசெய்யுமாறு தமிழ்பேசும் மக்களின் அனைத்து தலைவர்களிடமும்புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் சார்பாக அன்புடன்கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
Raj Sivanathan
International Coordinator 
Well-wishers of Tamils in Sri Lanka (WTSL)
Australia, Canada, Europe, Sri Lanka, UK and USA
Email: rajasivanathan@gmail.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert