Juni 28, 2024

யாருக்கு வாக்களிப்பது:முடிவில்லையாம்!

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் உறுதியாகக் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

„ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியிடம் வினவினேன். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித திட்டமும் இல்லை என்றும், தேர்தல் உரிய வகையில் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.அடுத்தது ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிப்பு பற்றியும் தகவல்கள் வெளியாகின. அது பற்றியும் வினவினேன். அவ்வாறு எவ்வித திட்டம் இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வெற்றியோ, தோல்வியோ நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் பெரும்பாலானவர்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.“ – என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert