காவடி தயார்:மீண்டும் வரும் ஜெய்சங்கர்!

மீணடும் மோடி பிரதமர் கதிரையில் அமர்ந்துள்ள நிலையில் இந்திய அதானி முதலீட்டு நடவடிக்கைகள் முழு அளவில் மும்முரமாகவுள்ளது.அதற்கு ஏதுவாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும்  20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அவரது பயணத்தின் போது, ​​தற்போதைய நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மேற்பார்வையிடுவதையும், இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பிலும் அவரது விஜயத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதேவேளை கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ள ஜெய்சங்கரிடம் வழமை போலே 13 அமுலாக்கம் தொடர்பில் பேசவுள்ளதாக கூறப்படுகின்றது .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert