Juni 26, 2024

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.

எமது விடுதலைப் போராட்டத்துக்கு கல்விக்கு கவசமாக இருப்பது போல, கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும். * எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை 05.06.1974 அன்று சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 50 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்ட கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட மாவீரம்…தியாகி பொன் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஆனி (ஜூன்) மாதம் 6ம் நாள் தமிழீழம் எங்கும் எழுச்சியோடு நடைபெறும்.

தமிழீழ ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்ட கல்வித் தரைப்படுத்தலை தமிழ் மாணவர்கள் மீது திணித்த போது ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் நஞ்சு (சயனைட்) அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஆனி (ஜூன்) 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஆனி (ஜூன்) 6ம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் எழுச்சியோடு நடைபெறும்

தியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர்.

இன்று அவரின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழினத்தின் இளையத்தலைமுறையினர் வீறுநடைபோடுகின்றனர் . இன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது.

காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert