Juni 30, 2024

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்போம் – யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரம்

தமிழர் தேசத்தில் இன்றும் சிங்கள பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், ஊடாக  திட்டமிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் தமிழர் தேசத்தைச் பேரினவாத சிங்கள அரசு எதிரி தேசமாகவே கருதி செயற்பட்டுவருகின்றது. 

ஒற்றையாட்சி அரச கட்டமைப்பினுள் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் தமது கைகளில் இருக்கும்வரை தமிழர்களால் அரசுக்கு எந்தவொரு நெருக்கடியையும் ஏற்படுத்த முடியாதெனக் கருதும்   சிங்கள அரசு தமிழ் மக்களைத் தனது மக்களாகக் கருதாமல் எதிரிகளாகக் கருதி சிங்கள தேசத்தின் நலன்களை மட்டுமே பேணிச் செயற்பட்டுவருகின்றது.

அவ்வாறான அரச தலைமைத்துவத்தினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற காத்திரமான செய்தி வெளிப்படுத்தப்பட வேண்டுமாயின் ஜனாதிபதித் தேர்தலை நிராகரிப்பதே தமிழ் மக்களுக்குள்ள ஒரே தெரிவாகும். இதன்மூலம் தமிழர்களுடன் கட்டாயமாகச் சமரசத்திற்கு வரவேண்டிய அரசியல், இராஜதந்திர நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்த முடியும் என்பதை   வலியுறுத்தி     ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க பிரச்சாரம்   தொடங்கியது   .  குறித்த நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து  நிலையத்தில்    தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியினரால் 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert