Mai 9, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து பதவி விலகினார் போரிஸ் ஜோன்சன்


கொரோனோ காலத்தில்அரசாங்கம் போட்ட கட்டுப்பாடுகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற பாட்டிகேற் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

போரிஸ் ஜோன்சன் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒருவேளை அவர் தவறாக பயன்படுத்தினார் என இந்தக்குழு அறிக்கை தாக்கல் செய்தால், நாடாளுமன்றத்தில் இருந்து 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்.

அலுவலகத்தை தவறாக பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒருவேளை அவர் தவறாக பயன்படுத்தினார் என இந்தக்குழு அறிக்கை தாக்கல் செய்தால், நாடாளுமன்றத்தில் இருந்து 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்.

எனக்கு எதிரான நடவடிக்கைகளைப் பயன்படுத்தி என்னை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதற்கு விசாரணைக் குழு உறுதியாக உள்ளது இந்நிலையில் அவர் பதவி விலகியுள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற்ற இருக்கிறது.

இந்நிலையில் போரிஸ் ஜோன்சன் கூறும் போது:

எனது அற்புதமான தொகுதியை விட்டு வெளியேறியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். மேயர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இரு பதவிகளிலும் தங்களுக்கு சேவை செய்வது மிகப்பெரிய மதிப்பு.

நான் உடனடியாக பதவி விலகுவதாகவும், உடனடி இடைத் தேர்தலைத் தூண்டுவதாகவும் உக்ஸ்பிரிட்ஜ் மற்றும் சவுத் ரூயிஸ்லிப்பில் உள்ள எனது சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன்.

நாடாளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதுவும் தற்போதை நிலையில்… சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்ளின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன்.

நாடாளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதுவும் தற்போதை நிலையில்… சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்ளின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன்.

விசாரணைக்குழுவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்ன வியப்பு என்றால், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவந்தது‘ என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert