September 26, 2023

தலைமை பதவி எனக்கு வேண்டாம் – பிரதமர் மஹிந்த…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் தனக்கில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பெற்றுக்கொள்வார் என அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதால், அந்த பதவியை மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பொறுபேற்பார் என அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய பின்னர் பல கஷ்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கி, அதன் தலைமைத்துவத்தை தான் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தற்போது அந்த கட்சியின் தலைவர் என்பதால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுபேற்கும் எந்த தேவையுமில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.