Mai 20, 2024

தொடரும் அம்பிட்டிய, ஜஹம்பத் அத்துமீறும் நடவடிக்கை i

கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரத குடியேற்ற வாசிகளுக்கும் சிறந்ததொரு தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் அதற்கு எதிர் மாறாக நேற்றைய தினம் சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய அராஜகம் அரங்கேரியுள்ளது..

குறித்த அத்துமீறிய நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தனது முகநூல் பதிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்-

அம்பிட்டிய சுமநரத்தின தேரரின் தலைமையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத்தின் வழிநடத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திபுல பெத்தான எனும் இடத்தில் புத்தபெருமானின் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தாங்கள் வழிபடுவதற்காகவும் தானம் | வழங்குவதற்காகவும், புண்ணிய கருமங்களில் ஈடுபவதற்க்குமாக சிலை வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினுடைய மட்டக்களப்பு மாவட்டத்தின் பழமை வாய்ந்த சிங்கள விவசாய மக்கள் குடியிருந்த ‚பெகர விகாரை “ என அழைக்கப்படும் விகாரையினை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது.

திபுல பொத்தான விஹாராதிபதி அதி வணக்கத்துக்குரிய ஞான நந்த பிக்குவினால் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வுகளில் அதிகளவான பௌத்த மத மக்களும் கிராமவாசிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

2015ம் ஆண்டு மாவட்ட அரசங்க அதிபர் சார்ல்ஸ், மற்றும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மேற்க்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாகஅகற்றப்பட் அத்துமீறிய சிங்கள குடியேற்றமும் விகாரையும் நேற்றய தினம் மீளவும் வைக்கப்பட்டுள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert