Mai 2, 2024

லெப் மாலதியின் 36வது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனியில் 14.10 .2023 இடம்பெற்றுது!

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற லெப் மாலதியின் 36வது நினைவு வணக்க நிகழ்வு.
14.1023 சனிக்கிழமை லெப் மாலதியின் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இன்நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி.
பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி
திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து சுடர்ஏற்றி மலர்தூவி வணக்க நிகழ்வு
முடிந்தபின் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து விடுதலை நடனங்கள் விடுதலைப் பாடல்கள்,கவிதை,வில்லுப்பாட்டு,சிறப்புரை என வீரம் செரிந்த வரலாற்று நாயகர்கள் நினைவு நாள்களை நினைவு கூறுவதுடன் எமது தேசிய நோக்காக இன்றய இளையோர் ஆளுமையுடன் வீரர்களை நினைவுகூறும் இடங்களில் தங்கள் சமர்பணமாக எமது வரலாற்று நாயகர்கள் கதைகளை, தேசியநோக்கோடு இணைந்து நடனமாகவும், கவிதையாகவும், பாடலாகவும், வில்லுப்பாட்டாகவும் பேச்சாகவும், உணர்வு பூர்வமாச சமர்பணம் செய்வது இளையோர்கள் எதிர்கால விடிவுக்கு வித்திடுவார்கள் என்ற தலைவர் நப்பிக்கை இன்றய மாலதியின் நிகழ்வும் மற்றய வீர வணக்க நிகழ்வுகளும் எடுத்துக்காட்டி நிற்கின்றது,

தமிழராய் தலை நிமிர்வோம்

தலைவன் வேதவழி நடப்போம்

நிறைவாகதேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாயக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert