Mai 20, 2024

சிவபாலனின் 25வது நினைவேந்தல்!

 யாழ். மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளர்.  பொன். சிவபாலனின் 25ஆவது வருட நினைவு 11.09.2023 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் அன்னாரது  சித்தங்கேணி இல்லத்தில் நடைபெறும். 

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ். மாநகரசபையில் மாநகர போக்குவரத்து சம்பந்தமான உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது கூரைமேல் வைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன் கொல்லப்பட்டார்.

அவருடன் யாழ். நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ் பொலிஸ் அத்தியடசகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையக பொலிஸ் அதிகாரி மோகனதாஸ், யாழ். நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert