Mai 20, 2024

இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை

இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் சனிக்கிழமை பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் முன்னெடுக்கப்பட்டது.

இதுவரையில், மூன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியங்களை பதிவுசெய்துள்ளதாகவும் அவற்றில் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பான தகவல்களை வழங்கியபோதிலும் இதுவரையில் தமக்கான நீதிபெற்றுக்கொடுக்கப்படவில்லையெனவும் இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நீதித்துறையினையே மாற்றி தமக்கு சார்பான தீர்ப்புகளை பெறும் நிலைமைகள் அரசாங்க மட்டங்களினால் காணப்படுவதனால் இலங்கையின் நீதித்துறையில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும் சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை இந்தவேளையில் வலியுறுத்துவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினால் அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டடது.

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 மாதம் திகதி மாலை இராணுவத்தினரால் சத்துருக்கொண்டான்,கொக்குவில்,பனிச்சையடி,பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது சிறுவர்கள், பெண்கள்,வயோதிபர்கள்,இளைஞர் யுவதிகள்,கர்ப்பிணிப்பெண்கள் என 186பேர் ஒரே நேரத்தில் கொண்டு செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert