Mai 20, 2024

வடக்கை நம்பியே இனி இலங்கை!

„2030ஆம் ஆண்டிற்குள் இலங்கையின்; மொத்த மின் உற்பத்தியில் 70விழுக்காடு ஆனது புதுப்பிக்கக் கூடிய சக்தி வளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும்“ என்ற இலக்கினை நோக்கி செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கினை அடைவதற்காக வடமாகாணத்தின் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசமே தற்போது புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மையமாக மாறியுள்ளது.

திட்டத்திற்காக மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுள்ள இந்திய நிறுவனமான அதானி, 480 மெகாவாட் மின்சாரத் திட்டங்களை செயற்படுத்தவுள்ளது.

திட்டத்திற்காக மன்னார் மற்றும் பூநகரி பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது தவிர, மன்னாரில் கட்டப்பட்ட இலங்கையின்; மிகப்பெரிய காற்றாலை மின் நிலையமான தம்பவனி மின் உற்பத்தி நிலையம் தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.

புவியியல் ரீதியாக இயற்கையாகவே அதிகளவு காற்று வீசக்கூடிய இடமாக மன்னார் கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே மின் உற்பத்திக்கான எதிர்கால இலக்க்கினை எட்ட பொருத்தமான இடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இயற்கை ஹைட்ரிஜன் மற்றும் அமோனியா உற்பத்திகள் மூலம் பிராந்தியத்தின்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  ஆற்றல்திறனை பயன்படுத்துவதே வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் விசேட  நோக்கமாகும். இதன் ஊடாக முதலீட்டை ஈர்க்கவும் கொழும்பு துறைமுகத்தை முன்னேற்றவும்    எதிர்பார்க்கப்படுவதோடு  பூநகரி புதிய நகரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பொருளாதார  மையமாக பெயரிட்டு அதன் ஊடாக பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert