Mai 20, 2024

6 மாதங்களுக்கு பின் கொழும்பில் இருந்து யாழ். வந்த புகையிரதம்

கொழும்பு கோட்டையில் இருந்து விசேட புகையிரதம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

ஓமந்தை முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை திருத்த பணிக்காக , கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து ஓமந்தை வரையிலும் நடைபெற்றது. அதேபோன்று கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரையிலையே சேவை இடம்பெற்றது

இந்நிலையில் தற்போது புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கொழும்பில் இருந்து விசேட புகையிரதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தது. 

குறித்த புகையிரதத்தில் , போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட புகையிரத  திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.

இந்த விசேட புகையிரதமானது, அதிகாலை 5.45 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் வருகை தந்த போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணரத்னவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இளநீர் கொடுத்து வரவேற்றார்.

அதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை முதல் யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert