April 26, 2024

தேர்தல் பிற்போடப்பட்டால் இலங்கை GSP+ ஐ இழக்கும்

உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பப் பெறலாம் என எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்தத் தவறினால், ஐ.சி.சி.பி.ஆர். உடன்படிக்கையை மேற்கோள் காட்டி ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக பல ஜேர்மன் மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் இலங்கையில் தமது வணிக நிறுவங்களை மூடியுள்ள என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert