April 26, 2024

ரணிலின் அதிரடி அறிவிப்புகள்: ஜனாதிபதி கொடி நீக்கம்! அதிமேதகு ஜனாதிபதி சொல் நீக்கம்!

இலங்கையில் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை இலங்கையின் துணை ஜனாதிபதியாக நான் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள விக்கிரமசிங்க, இந்தக் காலப்பகுதியில் தற்காலிகமாக துணை ஜனாதிபதியாக செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையின் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

  1. குடியரசுத் தலைவருக்குப் பயன்படுத்தப்படும் „அதி மேதகு ஜனாதிபதி“ என்ற சொல் இனி பயன்படுத்தப்படாது என்று கூறினார்.
  2. நாட்டிற்கு ஒரே ஒரு தேசியக் கொடியே தேவைப்படுவதால், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடி நீக்கப்படும் என விக்ரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் துணை ஜனாதிபதியாக தற்காலிகமாக கடமையாற்றும் போது மேற்கொள்ள வேண்டிய பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

  • அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்துவதற்கு தேவையான சட்டமூலங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அடுத்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதிக்கு 19 வது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
  • சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும், அரசியலமைப்பை மீறும் எந்தவொரு செயலுக்கும் இடமளிக்கப் போவதில்லை.
  • அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுவேன்.

என்றும் துணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert